000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சண்டேசுவர நாயனார் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a 63 நாயன்மார்களுள் ஒருவராகிய சண்டேச நாயனார் சிவபெருமானின் அணுக்கத் தொண்டருள் ஒருவர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சண்டேசுவரர் சிவபெருமானால் மகனாக ஏற்றுகொள்ளப்பட்டுச் சண்டீசப்பதம் அளிக்கப்பட்ட பெருமைக்குரியவர். கிருதயுகத்தில் "பிரசண்டர்' எனவும், திரேதாயுகத்தில் "விக்ராந்த சண்டிகேசுவரர்' என்றும், துவாபரயுகத்தில் "விஷ சண்டிகேசுவரர்' என்றும், கலியுகத்தில் "வீரசண்டிகேசுவரர்' என்றும் நான்கு யுகங்களிலும் நான்கு விதமாக அழைக்கப்படுபவர். மண்ணையாற்றின் தென்கரையில் சேய்ஞலூர் என்னும் சிற்றூரில் எச்சதத்தன்-பவித்திரையின் புதல்வராகப் பிறந்தவர் விசாரசருமர். மண்ணையாற்றங் கரையில் பசுக்கள் மேய்ப்பதை விடுத்து, மணலால் சிவலிங்கம் அமைத்து, பசுக்கள் சொரிந்த பாலை லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார் விசாரசருமர். இதையறிந்த அவரின் தந்தை, அவரை கோலால் அடித்தார். ஆனால் அவர் தொடர்ந்து சிவபூஜையில் ஈடுபட்டார். இதனால் கோபம் அதிகமாகி, அபிஷேகப் பால் குடத்தை எட்டி உதைத்து சிவலிங்கத்தை சிதைத்தார் அவர் தந்தை. சிவ பக்தியால், கீழே கிடந்த கோலை எடுத்தார். அது மழுவாக மாறியது. அதைக் கொண்டு தந்தையின் இரு கால்களையும் வெட்டினார் விசாரசருமர். அப்போது இறைவன் காட்சி தந்து, ""இனி நாமே உமக்கு தந்தையாவோம்.'' என்று கூறி, தம் திருத்தொண்டர்களுக்கு அவரைத் தலைவராக்கி, தன் சிரசின் மீதிருந்த கொன்றை மாலையை அவருக்குச் சூட்டி "சண்டேசுரபரம்' தந்தருளினார். சிவனருளால், விசாரசருமர் "சண்டேசுவரர்' ஆனார். சண்டேச நாயனார் வரலாறு கூறும் இச்சிற்பத் தொகுதியில் அம்மையப்பர் இடப வாகனத்தில் காட்டப்பட்டுள்ளனர். வலது புறம் சிவனார் விசாரசருமருக்கு தலையில் கொன்றை மாலையை சூட்டி, சண்டிகேசுவர பதத்தை அருளுகிறார். இக்காட்சியை அருகில் சிவனருளால் உயிர் பெற்று எழுந்த அவர் தந்தை காட்டி நிற்கிறார். கொன்றை மாலை சூடும் இறைவனின் அருகில் மிகவும் பணிவுடன் சிறுவனாக, இரு கைகளைக் குவித்து வணங்கிய நிலையில் சண்டேச நாயனார் காட்டப்பட்டுள்ளார். |
653 | : | _ _ |a சண்டேச நாயனார், சண்டேசர், சிவத்தொண்டர், சண்டேசப் பெருமான், சண்டீசுவரர், சண்டிகேசுவரர், 63 நாயன்மார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000323 |
barcode | : | TVA_SCL_000323 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |